Thursday, November 5, 2009

ஹிப் ஹாப் நடனம்

ஹிப் ஹாப் நடனம் பற்றிய மிகச் சிறிய கட்டுரை இது. பின்னொரு நாளில் விரிவான கட்டுரையை எழுதுவதாக நண்பர் கவுதம சித்தார்தனுக்கு வாக்களித்திருக்கிறேன்



ஹிப்- ஹாப்

ஹிப்- ஹாப் இசையும் கலாச்சாரமும் ஒரே நேரத்தில் தோன்றி வளர்ந்தவை. எவ்வித திட்டமிடலும்ம இல்லாமல் கூட்டமாகப் பாடவோ. தனியாகப் பாடவோ .பாடிக்கொண்டு ஆடவோ, மற்றவர்கள் இசையமைத்த பாடல்களை தம் விருப்பம் போல கோர்த்துக் கொண்டு நடனமாடவோ இது தரும் சாத்தியங்களே இது பிரபலமாகக் காரணம் என்பது உண்மை. அரசியல் சார்ந்த. சமூகம் சார்ந்த மர்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சுத்ந்திரமாக வெளிப்படுத்தும் இந்த இசைவடிவம் நியூயார்க் நகரிலுள்ள ப்ரன்க்ஸ் பகுதியில் வாழ்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஜமாய்க்க குடியேறிகளால் எழுபதுகளில் துவக்கப்பட்டது எனலாம், ராப் என்ற பெயரும் அதற்க்கு உண்டு.எம் சி அல்லது எம்சீயிங் என்ற குரலிசை வடிவமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ஒருங்கிணைந்த இசைக்கருவிகளின் துணையோடு இசைக்கலைஞ்ன் பாடவோ, அல்லது நீண்ட கவிதைகளீன் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைப் பாடவோ அல்லது வெவ்வேறு இசைக்கலைகர்களின் இசையக் கோர்த்து ஒரே இசையக்கவோ இதில் முடியும், இதன் தாள வடிவம் கர்னாடக இசையின் ஆதிதாளம் போல 4\4 அலகுகளைக் கொண்டது. இது பெரும்பாலும் டிஸ்கோ ஜாக்கி எனப்படும் இசைக்கலவைத் தயாரிப்பாளர்களின் படைப்பாக இது இருக்கும்.

கருப்பின மக்களின் பார்ட்டிகளில் இது தவறாமல் இடம் பெற்று
மெல்ல மெல்ல பிரபலமாகியது. கேலியும் கிண்டலும் இதன் முக்கிய அம்சம். எதைவேண்டுமானாலும் பாடலாம் என்ற எளிமை இதன் இன்னொரு சிறப்பு. எவர் இசையமைத்த பாடலாக இருந்தாலும் அவ்ர் குரலை மாற்றி நம் குரலாகப் பாடலாம் என்பது ஒரு அதிசயம் போல இதனைப் பார்க்க வைத்த விஷயம்,
இசைக் கருவிகளோ ஏன் இசைத்தட்டுகளோ வாங்க முடியாத ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் இசை தான் இந்த ஹிப்- ஹாப்.